நடிகை ஷகீலா இறந்துபோனதாக பரவிய வதந்தி : பதறியடித்து பேசிய வீடியோ

கவர்ச்சி படங்களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷகிலா.அவருடைய படம் ரிலீஸாகிறது என்றால் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதும். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரை பலரும் அம்மா என அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அவர் திருநங்கை மகளை தத்தெடுத்து வளர்ப்பது பலரையும் கவர்ந்திருக்கிறது.

இந்நிலையில்தான் நடிகை ஷகீலா இறந்துவிட்டார் என்ற தகவல் தீயாக பரவியது. அதன் பிறகு ஷகீலா இறக்கவில்லை. இது ஒரு வதந்தி என்வது தெரியவந்தது. இதனையடுத்து நடிகை ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், சிரித்த முகமாகவும் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் வதந்தியை பரப்பியவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

The post நடிகை ஷகீலா இறந்துபோனதாக பரவிய வதந்தி : பதறியடித்து பேசிய வீடியோ appeared first on Health Tips in Tamil, Cinema News in Tamil, South Actress Gallery, ஆன்மிக தகவல்கள்.

(Visited 1 times, 1 visits today)