பிரபல நடிகரின் மகன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

80 மற்றும் 90 களில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த். குணச்சித்திர நடிகர், வில்லன் என தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவருடைய மகன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டது குறித்து திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

news in tamil

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருபதன் ஜெய் கடந்த ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி தேர்வில் 75வது இடத்தை பிடித்தார். திரையுலகினர் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த், சிவக்குமார் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தன்னுடைய மகன்களுக்கு படிப்பின் மீதே ஆர்வம் இருப்பதாக சின்னி ஜெயந்த் கூறினார்.

தமிழ் திரையுலகில் முதன் முறையாக ஒரு நடிகரின் மகன் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

The post பிரபல நடிகரின் மகன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்

appeared first on Tamil Cinema News | Actress Photos | Today Tamil Cinema News | TamilXP.

(Visited 1 times, 1 visits today)